பாடல் 304
எழுதிகழ் புவன நொடியள வதனி
- தலம்
- குன்றுதோறாடல்
- ராகம்
- பேகடா
- தாளம்
- மிஸ்ரசாபு (3 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2தனதன தனன தனதன தனனதனதன தனனதனதான
பாடல் வரிகள்
எழுதிகழ் புவன நொடியள வதனிலியல்பெற மயிலில்வருவோனே
இமையவர் பரவி யடிதொழ அவுணர்மடிவுற விடுவதொருவேலா
வழுதியர் தமிழி னொருபொரு ளதனைவழிபட மொழியுமுருகேசா
மலரடி பணியு மடமகள் பசலைமயல்கொடு தளர்வதழகோதான்
முழுகிய புனலி லினமணி தரளமுறுகிடு பவளமிகவாரி
முறையொடு குறவர் மடமகள் சொரியுமுதுமலை யழககுருநாதா
பழகிய வினைகள் பொடிபட அருளில்படிபவ ரிதயமுறுகோவே
பருவரை துணிய வொருகணை தெரிவபலமலை யுடையபெருமாளே.
