பாடல் 301
வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்
- தலம்
- திருத்தணிகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தன தானம் தனத்தன தானம்தனத்தன தானம்தனதான
பாடல் வரிகள்
வினைக்கின மாகுத் தனத்தினர் வேளம்பினுக்கெதி ராகும்விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்சமத்திடை போய்வந்துயர்மூழ்கிக்
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்கருக்குழி தோறுங்கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்கழற்புக ழோதுங்கலைதாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்சியைப்புணர் வாகம்புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்பொருக்கெழ வானும்புநக்முளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்திறக்கம ராடுந்திறல்வேலா
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்திருத்தணி மேவும்பெருமாளே.
