பாடல் 298
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலை
- தலம்
- திருத்தணிகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தனாத் தனன தத்தனாத் தனனதத்தனாத் தனனதனதான
பாடல் வரிகள்
வட்டவாட் டனம னைச்சிபாற் குதலைமக்கள்தாய்க் கிழவிபதிநாடு
வைத்ததோட் டமனை யத்தமீட் டுபொருள்மற்றகூட் டமறிவயலாக
முட்டவோட் டிமிக வெட்டுமோட் டெருமைமுட்டர்பூட் டியெனையழையாமுன்
முத்திவீட் டணுக முத்தராக் கசுருதிக்குராக் கொளிருகழல்தாராய்
பட்டநாற் பெரும ருப்பினாற் கரஇபத்தின்வாட் பிடியின்மணவாளா
பச்சைவேய்ப் பணவை கொச்சைவேட் டுவர்பதிச்சிதோட் புணர்தணியில்வேளே
எட்டுநாற் கரவொ ருத்தல்மாத் திகிரியெட்டுமாக் குலையஎறிவேலா
எத்திடார்க் கரிய முத்தபாத் தமிழ்கொடெத்தினார்க் கெளியபெருமாளே.
