பாடல் 290
மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்
- தலம்
- திருத்தணிகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தத்தன தனன தத்தனதனன தத்தனதனதான
பாடல் வரிகள்
மலைமு லைச்சியர் கயல்வி ழிச்சியர்மதிமு கத்தியரழகான
மயில்ந டைச்சியர் குயில்மொ ழிச்சியர்மனது ருக்கிகளணைமீதே
கலைநெ கிழ்த்தியே உறவ ணைத்திடுகலவி யிற்றுவள்பிணிதீராக்
கசட னைக்குண அசட னைப்புகல்கதியில் வைப்பதுமொருநாளே
குலகி ரிக்குல முருவ விட்டமர்குலவு சித்திரமுனைவேலா
குறவர் பெற்றிடு சிறுமி யைப்புணர்குமர சற்குணமயில்வீரா
தலம திற்புக லமர ருற்றிடர்தனைய கற்றியஅருளாளா
தருநி ரைத்தெழு பொழில்மி குத்திடுதணிம லைக்குயர்பெருமாளே.
