பாடல் 282
புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப்
- தலம்
- திருத்தணிகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தத்தத் தனதன தத்தத்தனதன தத்தத்தனதான
பாடல் வரிகள்
புருவ நெறித்துக் குறுவெயர் வுற்றுப்புளகித வட்டத்தனமானார்
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்புரளு மசட்டுப்புலையேனைக்
கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்கதிதனை விட்டிட்டிடுதீயக்
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்கழல்கள் துதிக்கக்கருதாதோ
செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்திரைகட லுட்கப்பொரும்வேலா
தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்கொடிதன வெற்பைப்புணர்மார்பா
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்பெரிகை முழக்கப்புவிமீதே
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்ப்ரியமிகு சொக்கப்பெருமாளே.
