உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 272

தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு

ராகம்
கானடா
தாளம்
ஆதி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாத்தன தத்தன தானன தானனதாத்தன தத்தன தானன தானனதாத்தன தத்தன தானன தானனதனதான

பாடல் வரிகள்

தாக்கம ருக்கொரு சாரையை வேறொருசாக்ஷிய றப்பசி யாறியை நீறிடுசாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழுதவ்முழ்குந்

தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரைதடுமாறிப்

போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்போற்றுத லற்றது ரோகியை மாமருள்பூத்தம லத்ரய பூரியை நேரியபுலையேனைப்

போக்கிவி டக்கட னோஅடி யாரொடுபோய்ப்பெறு கைக்கிலை யோகதி யானதுபோர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள்புரிவாயே

மூக்கறை மட்டைம காபல காரணிசூர்ப்பந கைப்படு மூளியு தாசனிமூர்க்க குலத்திவி பீஷணர் சோதரிமுழுமோடி

மூத்தவ ரக்கனி ராவண னோடியல்பேற்றிவி டக்கம லாலய சீதையைமோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடுமுகிலேபோய்

மாக்கன சித்திர கோபுர நீள்படைவீட்டிலி ருத்திய நாளவன் வேரறமார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன்மருகோனே

வாச்சிய மத்தள பேரிகை போல்மறைவாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனைவாய்த்ததி ருத்தணி மாமலை மேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →