உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 253

கச்சணி யிளமுலை முத்தணி பலவகை

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்தன தனதன தத்தன தனதனதத்தன தனதனதனதான

பாடல் வரிகள்

கச்சணி யிளமுலை முத்தணி பலவகைகைச்சரி சொலிவரமயல்கூறிக்

கைப்பொருள் கவர்தரு மைப்பயில் விழியினர்கட்செவி நிகரல்குல்மடமாதர்

இச்சையி னுருகிய கச்சைய னறிவிலியெச்சமி லொருபொருளறியேனுக்

கிப்புவி மிசைகமழ் பொற்பத மலரிணையிப்பொழு தணுகவுனருள்தாராய்

கொச்சையர் மனையிலி டைச்சியர் தயிர்தனைநச்சியெ திருடியகுறையால்வீழ்

குற்கிர வினியொடு நற்றிற வகையறிகொற்றவு வணமிசைவருகேசன்

அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில்அச்சுதன் மகிழ்தருமருகோனே

அப்பணி சடையரன் மெச்சிய தணிமலையப்பனெ யழகியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →