பாடல் 245
உடையவர்க ளேவ ரெவர்களென நாடி
- தலம்
- திருத்தணிகை
- ராகம்
- நளினகாந்தி
- தாளம்
- ஆதி தேசாதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனதன தான தனனதன தானதனனதன தானதனதான
பாடல் வரிகள்
உடையவர்க ளேவ ரெவர்களென நாடியுளமகிழ ஆசுகவிபாடி
உமதுபுகழ் மேரு கிரியளவு மானதெனவுரமு மானமொழிபேசி
நடைபழகி மீள வறியவர்கள் நாளைநடவுமென வாடிமுகம்வேறாய்
நலியுமுன மேயு னருணவொளி வீசுநளினஇரு பாதமருள்வாயே
விடைகொளுவு பாகர் விமலர்திரி சூலர்விகிர் தர்பர யோகர்நிலவோடே
விளவு சிறு பூளை நகுதலையொ டாறுவிடவரவு சூடுமதிபாரச்
சடையிறைவர் காண உமைமகிழ ஞானதளர் நடையி டாமுன்வருவோனே
தவமலரு நீல மலர்கனைய நாதிதணிமலையு லாவுபெருமாளே.
