பாடல் 243
இருமலு ரோக முயலகன் வாத
- தலம்
- திருத்தணிகை
- ராகம்
- அஸாவேரி
- தாளம்
- மிஸ்ரசாபு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2தனதன தான தனதன தானதனதன தானதனதான
பாடல் வரிகள்
இருமலு ரோக முயலகன் வாதமெரிகுண நாசிவிடமேநீ
ரிழிவுவி டாத தலைவலி சோகையெழுகள மாலையிவையோடே
பெருவயி றீளை யெரிகுலை சூலைபெருவலி வேறுமுளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாதபடியுன தாள்கள்அருள்வாயே
வருமொரு கோடி யசுரர்ப தாதிமடியஅ நேகஇசைபாடி
வருமொரு கால வயிரவ ராடவடிசுடர் வேலைவிடுவோனே
தருநிழல் மீதி லுறைமுகி லுர்திதருதரு மாதின்மணவாளா
சலமிடை பூவி னடுவினில் வீறுதணிமலை மேவுபெருமாளே.
