உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 230

மருவே செறித்த குழலார் மயக்கி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனனா தனத்த தனனா தனத்ததனனா தனத்ததனதான

பாடல் வரிகள்

மருவே செறித்த குழலார் மயக்கிமதனா கமத்தின்விரகாலே

மயலே யெழுப்பி யிதழே யருத்தமலைபோல் முலைக்குளுறவாகிப்

பெருகாத லுற்ற தமியேனை நித்தல்பிரியாது பட்சமறவாதே

பிழையே பொறுத்து னிருதாளி லுற்றபெருவாழ்வு பற்றஅருள்வாயே

குருவா யரற்கு முபதேசம் வைத்தகுகனே குறத்திமணவாளா

குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்துகுடகா விரிக்குமிளையோனே

திருமால் தனக்கு மருகா வரக்கர்சிரமே துணித்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →