உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 229

மகர கேத னத்த னுருவி லானெ டுத்து

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனன தான தத்த தனன தான தத்ததனன தான தத்ததனதான

பாடல் வரிகள்

மகர கேத னத்த னுருவி லானெ டுத்துமதுர நாணி யிட்டுநெறிசேர்வார்

மலைய வேவ ளைத்த சிலையி னு஡டோ ளித்தவலிய சாய கக்கண்மடமாதர்

இகழ வாச முற்ற தலையெ லாம்வெ ளுத்துஇளமை போயொ ளித்துவிடுமாறு

இடைவி டாதெ டுத்த பிறவி வேர றுத்துனினிய தாள ளிப்பதொருநாளே

அகில மேழு மெட்டு வரையின் மீது முட்டஅதிர வேந டத்துமயில்வீரா

அசுரர் சேனை கெட்டு முறிய வான வர்க்குஅடைய வாழ்வ ளிக்குமிளையோனே

மிகநி லாவெ றித்த அமுத வேணி நிற்கவிழைசு வாமி வெற்பிலுறைவோனே

விரைய ஞான வித்தை யருள்செய் தாதை கற்கவினவ வோது வித்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →