உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 220

தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்ததனதான

பாடல் வரிகள்

தருவரிவ ராகு மென்று பொருணசையி னாடி வண்டுதனைவிடுசொல் தூது தண்டமுதலான

சரசகவி மாலை சிந்து கலிதுறைக ளேச லின்பதருமுதல தான செஞ்சொல்வகைபாடி

மருவுகையு மோதி நொந்து அடிகள்முடி யேதெ ரிந்துவரினுமிவர் வீத மெங்களிடமாக

வருமதுவொ போது மென்று வொருபணமு தாசி னஞ்சொல்மடையரிட மேந டந்துமனம்வேறாய்

உருகிமிக வாக வெந்து கவிதைசொலி யேதி ரிந்துஉழல்வதுவு மேத விர்ந்துவிடவேநல்

உபயபத மால்வி ளங்கி யிகபரமு மேவ இன்பமுதவியெனை யாள அன்புதருவாயே

குருகினொடு நாரை யன்றில் இரைகளது நாடி டங்கள்குதிகொளிள வாளை கண்டுபயமாகக்

குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்குகுருமலையின் மேல மர்ந்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →