பாடல் 209
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
- தலம்
- சுவாமி மலை
- தாளம்
- அங்கதாளம் (5 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனனா தனத்த தந்த தனனா தனத்த தந்ததனனா தனத்த தந்ததனதான
பாடல் வரிகள்
கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்புதருமா கடப்ப மைந்ததெடைமாலை
கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்தகருணா கரப்ர சண்டகதிர்வேலா
வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்முடியான துற்று கந்துபணிவோனே
வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்துமலர்வாயி லக்க ணங்களியல்போதி
அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்றுனருளால ளிக்கு கந்தபெரியோனே
அடியேனு ரைத்த புன்சொ லதுமீது நித்த முந்தணருளே தழைத்து கந்துவரவேணும்
செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்தபடிதான லக்க ணிங்கணுறலாமோ
திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்ததிருவேர கத்த மர்ந்தபெருமாளே.
