பாடல் 204
இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்
- தலம்
- சுவாமி மலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனாதனன தானம் தனாதனன தானம்தனாதனன தானம்தனதான
பாடல் வரிகள்
இராவினிருள் போலும் பராவுகுழ லாலும்இராமசர மாகும்விழியாலும்
இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும்இராதஇடை யாலும்இளைஞோர்நெஞ்
சராவியிரு போதும் பராவிவிழ வேவந்தடாதவிலை கூறும்மடவாரன்
படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும்அநாதிமொழி ஞானந்தருவாயே
குராவினிழல் மேவுங் குமாரனென நாளுங்குலாவியினி தோதன்பினர்வாழ்வே
குணாலமிடு சூரன் பணாமுடிக டோ ருங்குடாவியிட வேலங்கெறிவோனே
துராலுமிக தீமுன் பிராதவகை போலுந்தொடாமல்வினை யோடும்படிநூறுஞ்
சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ்சுவாமிமலை வாழும்பெருமாளே.
