பாடல் 185
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலு
- தலம்
- பழநி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தனதான தனதனன தனதானதனதனன தனதானதனதான
பாடல் வரிகள்
முகைமுளரி ப்ரபைவீசு மெழில்கனக மலைபோலுமுதிர்விலிள தனபாரமடவார்தோள்
முழுகியமி ழநுபோக விழலனென வுலகோர்கள்மொழியுமது மதியாமல்தலைகீழ்வீழ்ந்
தகமகிழ விதமான நகையமுத மெனவூறலசடரக மெழவாகிமிகவேயுண்
டழியுமொரு தமியேனு மொழியுமுன திருதாளினமுதுபரு கிடஞானமருளாயோ
மகரமெறி திரைமோது பகரகடல் தடவாரிமறுகுபுனல் கெடவேலைவிடுவோனே
வரிசையவுண் மகசேனை யுகமுடிய மயிலேறிவருபவனிரு கரதீரமுருகோனே
பகர்வரிய ரெனலாகு முமைகொழுந ருளமேவுபரமகுரு வெனநாடுமிளையோனே
பணிலமணி வெயில்வீசு மணிசிகர மதிசூடுபழநிமலை தனில்மேவுபெருமாளே.
