பாடல் 181
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி
- தலம்
- பழநி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தந்த தந்த தனதனன தந்த தந்ததனதனன தந்த தந்ததனதான
பாடல் வரிகள்
மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்திமதியொடுபி றந்து முன்பெய்வதையாலே
வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்தமதலையென வந்து குன்றின்வடிவாகி
இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்துஇரவுபகல் கொண்டொ டுங்கியசடாகும்
இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்துனிணையடிவ ணங்க என்றுபெறுவேனோ
திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கைதிகழெரியி டுங்கு ரங்கைநெகிழாத
திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள்செறிவுடன் றிந்து வென்றபொறியாளர்
பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்றபரமபத நண்ப ரன்பின்மருகோனே
பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்கபழநிமலை வந்த மர்ந்தபெருமாளே.
