பாடல் 168
திமிர வுததி யனைய நரக
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனன தனன தனனதனன தனனதனதான
பாடல் வரிகள்
திமிர வுததி யனைய நரகசெனன மதனில்விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவுசிறிது மிடியுமணுகாதே
அமரர் வடிவு மதிக குலமுமறிவு நிறையும்வரவேநின்
அருள தருளி யெனையு மனதோடடிமை கொளவும்வரவேணும்
சமர முகவெ லசுரர் தமதுதலைக ளுருளமிகவேநீள்
சலதி யலற நெடிய பதலைதகர அயிலைவிடுவோனே
வெமர வணையி லினிது துயிலும்விழிகள் நளினன்மருகோனே
மிடறு கரியர் குமர பழநிவிரவு மமரர்பெருமாளே.
