பாடல் 156
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
- தலம்
- பழநி
- தாளம்
- கண்டசாபு (2 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தக-1, தகிட-1 1/2 (எடுப்பு 1/2 தள்ளி)தனனா தனந்ததன தனனா தனந்ததனதனனா தனந்ததனதனதான
பாடல் வரிகள்
சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிருசெவிமீதி லும்பகர்செய்குருநாதா
சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநினசெயலேவி ரும்பியுளம்நினையாமல்
அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலுமடியேனை அஞ்சலெனவரவேணும்
அறிவாக மும்பெருக இடரான துந்தொலையஅருள்ஞான இன்பமதுபுரிவாயே
நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரிரகுராமர் சிந்தைமகிழ்மருகோனே
நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருதநலமான விஞ்சைகருவிளைகோவே
தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறுதிறல்வீர மிஞ்சுகதிர்வடிவேலா
திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிகசெகமேல்மெய் கண்டவிறல்பெருமாளே.
