பாடல் 139
களபமுலை யைத்தி றந்து தளவ நகை யைக்கொ ணர்ந்து
- தலம்
- பழநி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தத்த தந்த தனதனன தத்த தந்ததனதனன தத்த தந்ததனதான
பாடல் வரிகள்
களபமுலை யைத்தி றந்து தளவ நகை யைக்கொ ணர்ந்துகயலொடுப கைத்த கண்கள்குழைதாவக்
கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழந்துகடியிருளு டுக்கு லங்களெனவீழ
முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்பமுருகிதழ்சி வப்ப நின்றுவிலைகூறி
முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்துமுடுகுமவ ருக்கி ரங்கிமெலிவேனோ
இளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்துஇனியபொரு ளைப்ப கர்ந்தகுருநாதா
இபமுகவ னுக்கு கந்த இளையவ மருக்க டம்பஎனதுதலை யிற்ப தங்களருள்வோனே
குழகென எடுத்து கந்த உமைமுலை பிடித்த ருந்துகுமரசிவ வெற்ப மர்ந்தகுகவேலா
குடிலொடு மிகச்செ றிந்த இதணுள புனத்தி ருந்தகுரவர்மக ளைப்பு ணர்ந்தபெருமாளே.
