பாடல் 137
கலவியி லிச்சித் திரங்கி நின்றிரு
- தலம்
- பழநி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதனதன தத்தத் தனந்த தந்தனதந்ததான
பாடல் வரிகள்
கலவியி லிச்சித் திரங்கி நின்றிருகனதனம் விற்கச் சமைந்த மங்கையர்கயல்கள் சிவப்பப் பரிந்து நண்பொடுமின்ப்முறிக்
கனியித ழுற்றுற் றருந்தி யங்குறுமவச மிகுத்துப் பொருந்தி யின்புறுகலகம் விளைத்துக் கலந்து மண்டணையங்கமீதே
குலவிய நற்கைத் தலங்கொ டங்கணைகொடியிடை மெத்தத் துவண்டு தண்புயல்குழலள கக்கட் டவிழ்ந்து பண்டையிலங்கம்வேறாய்க்
குறிதரு வட்டத் தடர்ந்த சிந்துரமுகதல முத்துப் பொலிந்தி லங்கிடகொடிய மயற்செய்ப் பெருந்த டந்தனில்மங்கலாமோ
இலகிய சித்ரப் புனந்த னிந்துறைகுறமகள் கச்சுக் கிடந்த கொங்கைமினினிதுறு பத்மப் பதம்ப ணிந்தருள்கந்தவேளே
எழுகடல் வற்றப் பெருங்கொ டுங்கிரியிடிபட மிக்கப் ப்ரசண்டம் விண்டுறுமிகலர்ப தைக்கத் தடிந்தி லங்கியசெங்கைவேலா
பலவித நற்கற் படர்ந்த சுந்தரிபயில்தரு வெற்புத் தருஞ்செ ழுங்கொடிபணைமுலை மெத்தப் பொதிந்து பண்புறுகின்றபாலைப்
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ்பகரென இச்சித் துகந்து கொண்டருள்பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள்தம்பிரானே.
