பாடல் 133
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனைய
- தலம்
- பழநி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததனதனத்ததன தனத்ததனதனத்தனா தனதனதனதான
பாடல் வரிகள்
கருப்புவிலில் மருப்பகழி தொடுத்துமதன் விடுத்தனையகடைக்கணொடு சிரித்தணுகுகருத்தினால் விரகுசெய்மடமாதர்
கதக்களிறு திடுக்கமுற மதர்த்துமிக வெதிர்த்துமலைகனத்தவிரு தனத்தின்மிசைகலக்குமோ கனமதில்மருளாமே
ஒருப்படுதல் விருப்புடைமை மனத்தில்வர நினைத்தருளியுனைப்புகழு மெனைப்புவியில்ஒருத்தனாம் வகைதிருஅருளாலே
உருத்திரனும் விருத்திபெற அநுக்கிரகி யெனக்குறுகியுரைக்கமறை யடுத்து பொருள்உணர்த்துநா ளடிமையுமுடையேனோ
பருப்பதமு முருப்பெரிய அரக்கர்களு மிரைக்குமெழுபடிக்கடலு மலைக்கவலபருத்ததோ கையில்வருமுருகோனே
பதித்தமர கதத்தினுட னிரத்னமணி நிரைத்தபலபணிப்பனிரு புயச்சயிலபரக்கவே இயல்தெரிவயலுரா
திருப்புகழை யுரைப்பவர்கள் படிப்பவர்கள் மிடிப்பகைமைசெயித்தருளு மிசைப்பிரியதிருத்தமா தவர்புகழ்குருநாதா
சிலைக்குறவ ரிலைக்குடிலில் புகைக்களக முகிற்புடைசெல்திருப்பழநி மலைக்குளுறைதிருக்கைவே லழகியபெருமாளே.
