பாடல் 1318
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
- தலம்
- பழமுதிர்சோலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி(எடுப்பு - 1/2 இடம்)தானதன தந்த தானதன தந்ததானதன தந்ததனதான
பாடல் வரிகள்
வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்மாயமதொ ழிந்துதெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்துமாபதம ணிந்துபணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்ஆறுமுக மென்றுதெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்டதாடுமயி லென்பதறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டுநானிலம லைந்துதிரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டுநாடியதில் நின்றுதொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்றசோகமது தந்துஎனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்றுசோலைமலை நின்றபெருமாளே.
