உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1317

பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானத் தானன தத்தன தத்தனதானத் தானன தத்தன தத்தனதானத் தானன தத்தன தத்தனதனதான

பாடல் வரிகள்

பாசத் தால்விலை கட்டிய பொட்டிகள்நேசித் தாரவர் சித்தம ருட்டிகள்பாரப் பூதர மொத்தத னத்திகள்மிகவேதான்

பாவத் தால்மெயெ டுத்திடு பட்டிகள்சீவிக் கோதிமு டித்தள கத்திகள்பார்வைக் கேமயலைத்தரு துட்டிகளொழியாத

மாசுற் றேறிய பித்தளை யிற்பணிநீறிட் டேயொளி பற்றவி ளக்கிகள்மார்பிற் காதினி லிட்ட பிலுக்கிகள்அதிமோக

வாய்வித் தாரமு ரைக்கும பத்திகள்நேசித் தாரையு மெத்திவ டிப்பவர்மாயைக் கேமனம் வைத்தத னுட்டினமலைவேனோ

தேசிக் கானக முற்றதி னைப்புனமேவிக் காவல்க வட்கல்சு ழற்றுவள்சீதப் பாதகு றப்பெண்ம கிழ்ச்சிகொள்மணவாளா

தேடிப் பாடிய சொற்புல வர்க்கிதமாகத் தூதுசெ லத்தரில் கற்பகதேவர்க் காதிதி ருப்புக லிப்பதிவருவோனே

ஆசித் தார்மன திற்புகு முத்தமகூடற் கேவைகை யிற்கரை கட்டிடஆளொப் பாயுதிர் பிட்டமு துக்கடிபடுவோனோ

டாரத் தோடகி லுற்றத ருக்குலமேகத் தோடொரு மித்துநெ ருக்கியஆதிச் சோலை மலைப்பதி யிற்றிகழ்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →