பாடல் 1315
சீர்சிறக்கு மேனி பசேல் பசே லென
- தலம்
- பழமுதிர்சோலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதத்த தான தனாதனா தனதானதத்த தான தனாதனா தனதானதத்த தான தனாதனா தனதனதானா
பாடல் வரிகள்
சீர்சிறக்கு மேனி பசேல் பசே லெனநூபுரத்தி னோசை கலீர் கலீ ரெனசேரவிட்ட தாள்கள் சிவேல் சிவே லெனவருமானார்
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர் களுநூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடுதேடியொக்க வாடி யையோ வையோ வெனமடமாதர்
மார்படைத்த கோடு பளீர் பளீ ரெனஏமலித்தெ னாவி பகீர் பகீ ரெனமாமசக்கி லாசை யுளோ முளோ மெனநினைவோடி
வாடை பற்று வேளை யடா வடா வெனநீமயக்க மேது சொலாய் சொலாயெனவாரம்வைத்த பாத மிதோ இதோ எனஅருள்வாயே
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்கோடொ டித்த நாளில் வரைஇ வரைஇ பவர்பானி றக்க ணேசர் குவா குவா கனர் ....... ; ளையோனே
பாடல்முக்ய மாது தமீழ் தமீ ழிறைமாமுநிக்கு காதி லுணார் வுணார் விடுபாசமற்ற வேத ரு ரு பரகுமரோசா
போர்மிகுத்த சூரன் விடோ ம் விடோ மெனநேரெதிர்க்க வேலை படீர் படீ ரெனபோயறுத்த போது குபீர் குபீ ரெனவெகுசோரி
பூமியுக்க வீசு குகா குகா திகழ்சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வா னைதொள்பூணியிச்சை யாறு புயா புயா றுளபெருமாளே.
