பாடல் 1310
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்
- தலம்
- பழமுதிர்சோலை
- ராகம்
- ஸிம்மேந்திரமத்யமம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தானதன தான தந்த தானதன தான தந்ததானதன தான தந்ததனதான
பாடல் வரிகள்
சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர்சேருபொரு ளாசை நெஞ்சுதடுமாறித்
தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்றுதேடினது போக என்றுதெருவூடே
வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள்மாதர்மய லோடு சிந்தைமெலியாமல்
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன்மாயவினை தீர அன்புபுரிவாயே
சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழ மிஞ்சிசேணிலவு தாவ செம்பொன்மணிமேடை
சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்ததீரமிகு சூரை வென்றதிறல்வீரா
ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்றுளாடல்புரியீசர் தந்தைகளிகூர
ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்தஆதிமுத லாக வந்தபெருமாளே.
