பாடல் 1290
தீதுற் றேயெழு ...... திங்களாலே
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானத் தானனதந்ததான
பாடல் வரிகள்
தீதுற் றேயெழுதிங்களாலே
தீயைத் தூவியதென்றலாலே
போதுற் றாடுமநங்கனாலே
போதப் பேதைநலங்கலாமோ
வேதத் தோனைமுனிந்தகோவே
வேடப் பாவைவிரும்புமார்பா
ஓதச் சூதமெறிந்தவேலா
ஊமைத் தேவர்கள்தம்பிரானே.
