பாடல் 1287
சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- சாரங்கா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (8 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதிமிதக-3தனன தத்தன தாத்தனதனதான
பாடல் வரிகள்
சமய பத்தி வ்ருதாத்தனைநினையாதே
சரண பத்ம சிவார்ச்சனைதனைநாடி
அமைய சற்குரு சாத்திரமொழிநூலால்
அருளெ னக்கினி மேற்றுனைதருவாயே
உ மைமுலைத்தரு பாற்கொடுஅருள்கூறி
உ ரிய மெய்த்தவ மாக்கிநலுபதேசத்
தமிழ்த னைக்கரை காட்டியதிறலோனே
சமண ரைக்கழு வேற்றியபெருமாளே.
