பாடல் 1283
கருப்பற் றுறிப் ...... பிறவாதே
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- நடபைரவி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - திஸ்ர ஏகம் (3)தனத்தத் தானத்தனதான
பாடல் வரிகள்
கருப்பற் றுறிப்பிறவாதே
கனக்கப் பாடுற்றுழலாதே
திருப்பொற் பாதத்தநுபூதி
சிறக்கப் பாலித்தருள்வாயே
பரப்பற் றாருக்குரியோனே
பரத்தப் பாலுக்கணியோனே
திருக்கைச் சேவற்கொடியோனே
செகத்திற் சோதிப்பெருமாளே.
