உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1267

மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனை

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்தனா தத்ததன தத்தனா தத்ததனதத்தனா தத்ததனதனதான

பாடல் வரிகள்

மக்கள்தா யர்க்குமரு கர்க்குமா மர்க்குமனைவிக்கும்வாழ் நர்க்குமிகமனதூடே

மைத்தவே லைக்குநெடி துற்றமா யத்துயரம்வைத்துவா டச்சமனுமுறமேவித்

திக்குநா டிக்கரிய மெய்க்கடா விற்றிருகிதிக்கஆ விக்களவுதெரியாமுன்

சித்தமோ வித்துயிலு மற்றுவா ழச்சிறிதுசித்ரபா தக்கமலமருள்வாயே

இக்குவே ளைக்கருக முக்கணா டிக்கனலையிட்டுயோ கத்தமருமிறையோர்முன்

எச்சரா திக்குமுற நிற்குமா யற்குமுதலெட்டொணா வித்தைதனையினிதீவாய்

பக்கஆர் வத்துடனுள் நெக்குநா டிப்பரவுபத்தர்பா டற்குருகுமுருகோனே

பக்கம் யானைத்திருவொ டொக்கவா ழக்குறவர்பச்சைமா னுக்கினியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →