பாடல் 1256
நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தை
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தனா தனத்த தத்தனா தனத்ததத்தனா தனத்ததனதான
பாடல் வரிகள்
நச்சுவாள் விழிக்கொ டெற்றியே தனத்தைநத்துவார் சுகத்தில்நலமாக
நட்டமா மனத்தை யிட்டமே கொடுத்துநத்துவாழ் கடற்குளணைபோலே
கச்சமே செலுத்தி யச்சமே படுத்துகட்டஏழ் பிறப்புவிடவேதான்
கற்றநூ லுகக்க வெட்கமே செறித்தகட்டனே னினைப்பதொருநாளே
இச்சையே செலுத்தி யுச்சிதாள் பலிக்குமிட்டமா லவற்குமருகோனே
எற்றுவா ரிதிக்குள் முற்றிநீள் பொருப்பையெக்கிநேர் மடித்த ....... ; ளையோனே
மெச்சவே புடைத்த முத்தமார் தனத்திமிக்கவாள் படைத்தவிழியாலே
வெட்டுமா மறத்தி யொக்கவே யிருக்கவெற்றிவே லெடுத்தபெருமாளே.
