பாடல் 1239
சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்த
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- குந்தலவராளி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதிமிதகதிமி-4, தகிட-1 1/2தனதன தனத்த தத்த தனதன தனத்த தத்ததனதன தனத்த தத்ததனதான
பாடல் வரிகள்
சலமல மசுத்த மிக்க தசைகுரு தியத்தி மொய்த்ததடியுடல் தனக்கு ளுற்றுமிகுமாயம்
சகலமு மியற்றி மத்த மிகுமிரு தடக்கை யத்திதனிலுரு மிகுத்து மக்களொடுதாரம்
கலனணி துகிற்கள் கற்பி னொடுகுல மனைத்து முற்றிகருவழி யவத்தி லுற்றுமகிழ்வாகிக்
கலைபல பிடித்து நித்த மலைபடு மநர்த்த முற்றகடுவினை தனக்குள் நிற்பதொழியாதோ
மலைமக ளிடத்து வைத்து மதிபுனல் சடைக்குள் வைத்துமழுவனல் கரத்துள் வைத்துமருவார்கள்
மடிவுற நினைத்து வெற்பை வரிசிலை யிடக்கை வைத்துமறைதொழ நகைத்த அத்தர்பெருவாழ்வே
பலதிசை நடுக்க முற்று நிலைகெட அடற்கை யுற்றபடையது பொருப்பில் விட்டமுருகோனே
பழுதறு தவத்தி லுற்று வழிமொழி யுரைத்த பத்தர்பலருய அருட்கண் வைத்தபெருமாளே.
