உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1227

கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததனதத்தத் தனத்ததனதான

பாடல் வரிகள்

கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர்கட்டிப் புறத்திலணைமீதே

கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரிகத்திக் கொளுத்தியனைவோரும்

சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிதுசுத்தப் பொயொப்பதுயிர்வாழ்வு

துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொருசொர்க்கப் பதத்தையருள்வாயே

எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர்எய்ப்புத் தணித்தகதிர்வேலா

எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியையெற்பொற் புயத்திலணைவோனே

வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர்வைத்துப் பணைத்தமணிமார்பா

வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரைவெட்டித் துணித்தபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →