உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1221

ஊனே றெலும்பு சீசீ மலங்க

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - ஆதிதானா தனந்த தானா தனந்ததானா தனந்ததனதான

பாடல் வரிகள்

ஊனே றெலும்பு சீசீ மலங்களோடே நரம்புகசுமாலம்

ஊழ்நோ யடைந்து மாசான மண்டுமூனோ டுழன்றகடைநாயேன்

நானா ரொடுங்க நானார் வணங்கநானார் மகிழ்ந்துஉ னையோத

நானா ரிரங்க நானா ருணங்கநானார் நடந்துவிழநானார்

தானே புணர்ந்து தானே யறிந்துதானே மகிழ்ந்துஅ ளுறித்

தாய்போல் பரிந்த தேனோ டுகந்துதானே தழைந்துசிவமாகித்

தானே வளர்ந்து தானே யிருந்ததார்வேணி யெந்தையருள்பாலா

சாலோக தொண்டர் சாமீப தொண்டர்சர்ருப தொண்டர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →