பாடல் 1219
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஸிந்துபைரவி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5)தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1தனனா தனத்ததன தனனா தனத்ததனதனனா தனத்ததனதனதான
பாடல் வரிகள்
இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனையினிதாவ ழைத்தெனதுமுடிமேலே
இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளிரியல்வேல ளித்துமகிழிருவோரும்
ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளுமொளிர்வேத கற்பகநலிளையோனே
ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருளஉ பதேசி கப்பதமுமருள்வாயே
கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடுகரிமாமு கக்கடவுளடியார்கள்
கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்கருணாக டப்பமலரணிவோனே
திருமால ளித்தருளு மொருஞான பத்தினியைதிகழ்மார்பு றத்தழுவுமயில்வேலா
சிலைதூளே ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்சிறைமீள விட்டபுகழ்பெருமாளே.
