பாடல் 1211
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுண
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- ஹம்ஸவிநோதினி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்தாளம் (6)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமி-2தானான தான தனதன தானான தான தனதனதானான தான தனதனதனதான
பாடல் வரிகள்
ஆசார வீன னறிவிலி கோபாப ராதி யவகுணனாகாத நீச னநுசிதன்விபாணதன்
ஆசாவி சார வெகுவித மோகாச ணத பரவசனாகாச நீர்ம ணனல்வளியுருமாறி
மாசான நாலெண் வகைதனை நீநானெ னாத அறிவுளம்வாயாத பாவி யிவனெனநினையாமல்
மாதாபி தாவி னருணல மாறாம காரிலெனையினிமாஞான போத மருள்செயநினைவாயே
வீசால வேலை சுவறிட மாசூரர் மார்பு தொளைபடவேதாள ராசி பசிகெடஅறைகூறி
மேகார வார மெனஅதிர் போர்யாது தான ரெமபுரமீதேற வேல்கொ டமர்செயுமிளையோனே
கூசாது வேட னுமிழ்தரு நீராடி யூனு ணெனுமுரைகூறாம னீய அவனுகர்தருசேடங்
கோதாமெ னாம லமுதுசெய் வேதாக மாதி முதல்தருகோலோக நாத குறமகள்பெருமாளே.
