பாடல் 1210
அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்து
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தந்த தந்த தனன தான தந்த தந்ததனன தான தந்த தந்ததனதான
பாடல் வரிகள்
அளக பார முங்கு லைந்து அரிய பார்வை யுஞ்சி வந்துஅணுகி யாக மும்மு யங்கியமுதூறல்
அதர பான மும்நு கர்ந்து அறிவு சோர வும்மொ ழிந்துஅவச மாக வும்பு ணர்ந்துமடவாரைப்
பளக னாவி யுந்த ளர்ந்து பதறு மாக மும்ப யந்துபகலி ராவை யும்ம றந்துதிரியாமற்
பரம ஞான முந்தெ ளிந்து பரிவு நேச முங்கி ளர்ந்துபகரு மாறு செம்ப தங்கள்தரவேணும்
துளப மாய னுஞ்சி றந்த கமல வேத னும்பு கழ்ந்துதொழுது தேட ரும்ப்ர சண்டனருள்பாலா
சுரர்கள் நாய கன்ப யந்த திருவை மாம ணம்பு ணர்ந்துசுடரு மோக னம்மி குந்தமயில்பாகா
களப மார்பு டன்த யங்கு குறவர் மாது டன்செ றிந்துகலவி நாட கம்பொ ருந்திமகிழ்வோனே
கடிய பாத கந்த விர்ந்து கழலை நாடொ றுங்கி ளர்ந்துகருது வார்ம னம்பு குந்தபெருமாளே.
