உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1187

மாடமதிட் சுற்று மொக்க வைத்திட

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானதனத் தத்த தத்த தத்தனதானதனத் தத்த தத்த தத்தனதானதனத் தத்த தத்த தத்தனதனதான

பாடல் வரிகள்

மாடமதிட் சுற்று மொக்க வைத்திடவீடுகனக் கத்த னத்தி லச்சுறுமாலிபமொத் துப்ர புத்த னத்தினிலடைவாக

மாதர்பெருக் கத்த ருக்க மற்றவர்சூழவிருக் கத்த ரிக்க இப்படிவாழ்க்கையில்மத் தப்ர மத்த சித்திகொள்கடைநாளிற்

பாடையினிற் கட்டி விட்டு நட்டவர்கூடஅரற் றிப்பு டைத்து றுப்புளபாவையெடுத் துத்த ழற்கி ரைப்படவிடலாய

பாடுதொலைத் துக்க ழிக்க அக்ருபைதேடுமெனைத் தற்பு ரக்க வுற்றிருபாதுகையைப் பற்றி நிற்க வைத்தெனையருளாதோ

ஆடகவெற் பைப்பெ ருத்த மத்தெனநாகவடத் தைப்பி ணித்து ரத்தமரார்கள்பிடித் துத்தி ரித்தி டப்புகையனலாக

ஆழிகொதித் துக்க தற்றி விட்டிமையோர்களொளிக் கக்க ளித்த உ க்கிரஆலவிடத் தைத்த ரித்த அற்புதர்குமரேசா

வேடர்சிறுக் கிக்கி லச்சை யற்றெழுபாரும்வெறுத் துச்சி ரிப்ப நட்பொடுவேளையெனப் புக்கு நிற்கும் வித்தக ....... ; ளையோனே

வேகமிகுத் துக்க திக்கும் விக்ரமசூரர்சிரத் தைத்து ணித்த டக்குதல்வீரமெனத் தத்து வத்து மெச்சியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →