பாடல் 1185
மதன தனுநிக ரிடைக்கே மன
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனத்தா தனதனன தனதன தனத்தா தனதனன தனதன தனத்தா தனதனதான
பாடல் வரிகள்
மதன தனுநிக ரிடைக்கே மனமுருக வருபிடி நடைக்கே யிருவனச பரிபுர மலர்க்கே மதுகரம்வாழும்
வகுள ம்ருகமத மழைக்கே மணிமகர மணிவன குழைக்கே மடமகளிர் முகுளித முலைக்கே கடலமுதூறும்
அதர மதுரித மொழிக்கே குழையளவு மளவிய விழிக்கே தளவனைய தொருசிறு நகைக்கே பனிமதிபோலும்
அழகு திகழ்தரு நுதற்கே யநவரத மவயவ மனைத்தூ டினுமவச முறுமயல் தவிர்த்தாள் வதுமொருநாளே
உ ததி புதைபட அடைத்தா தவன்நிகரிலிரதமும் விடுக்கா நகர்ஒருநொ டியில்வெயி லெழச்சா நகிதுயர்தீர
உ பய வொருபது வரைத்தோள் களுநிசிச ரர்கள்பதி தசக்ண வமுமுருள ஒருகணை தெரித்தா னுமவுனஞான
திதமி லவுணர்த மிருப்பா கியபுரமு மெரியெழ முதற்பூ தரதிலத குலகிரிவளைத்தா னுமகிழவானோர்
திருவ நகர்குடி புகச்சீ கரமகர சலமுறை யிடச்சூ ரொடுசிகர கிரிபொடி படச்சா டியபெருமாளே.
