உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1184

மங்காதிங் காக்குஞ் சிறுவரு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தானந் தாத்தந் தனதனதந்தானந் தாத்தந் தனதனதந்தானந் தாத்தந் தனதனதனதான

பாடல் வரிகள்

மங்காதிங் காக்குஞ் சிறுவருமுண்டேயிங் காற்றுந் துணைவியும்வம்பாருந் தேக்குண் டிடவறிதெணும்வாதை

வந்தேபொன் தேட்டங் கொடுமனநொந்தேயிங் காட்டம் பெரிதெழவண்போதன் தீட்டுந் தொடரதுபடியேமன்

சங்காரம் போர்ச்சங் கையிலுடல்வெங்கானம் போய்த்தங் குயிர்கொளசந்தேகந் தீர்க்குந் தனுவுடனணுகாமுன்

சந்தாரஞ் சாத்தும் புயவியல்கந்தாஎன் றேத்தும் படியெனசந்தாபந் தீர்த்தென் றடியிணைதருவாயே

கங்காளன் பார்த்தன் கையிலடியுண்டேதிண் டாட்டங் கொளுநெடுகன்சாபஞ் சார்த்துங் கரதலனெருதேறி

கந்தாவஞ் சேர்த்தண் புதுமலரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழிகண்டான்வெங் காட்டங் கனலுறநடமாடி

அங்காலங் கோத்தெண் டிசைபுவிமங்காதுண் டாற்கொன் றதிபதிஅந்தாபந் தீர்த்தம் பொருளினையருள்வோனே

அன்பாலந் தாட்கும் பிடுமவர்தம்பாவந் தீர்த்தம் புவியிடைஅஞ்சாநெஞ் சாக்கந் தரவலபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →