உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1183

பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனன தனதன தனத்தத் தாத்தனதனன தனதன தனத்தத் தாத்தனதனன தனதன தனத்தத் தாத்தனதனதான

பாடல் வரிகள்

பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்புளக தனவட மசைத்துக் காட்டுவர்புயலி னளகமும் விரித்துக் காட்டுவர்பொதுமாதர்

புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர்பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர்புதிய பரிபுர நடித்துக் காட்டுவரிளைஞோரை

உ ருக அணைதனி லணைத்துக் காட்டுவர்உ டைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெஉ ததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர்பொடிமாயம்

உ தர மெரிதர மருத்திட் டாட்டிகள்உ யிரினிலைகளை விரித்துச் சேர்ப்பவர்உ றவு கலவியை விடுத்திட் டாட்கொளநினையாதோ

மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரிமகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர்மறுக வொருகயி றடித்திட் டார்ப்புறஅழுதூறும்

வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டெனஅசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன்மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன்மருகோனே

விருது பலபல பிடித்துச் சூர்க்கிளைவிகட தடமுடி பறித்துத் தோட்களைவிழவு முறியவு மடித்துத் தாக்கியஅயில்வீரா

வெகுதி சலதியை யெரித்துத் தூட்படவினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சியவிபுத மலரடி விரித்துப் போற்றினர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →