பாடல் 1168
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- மத்யமாவதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகதமி-2தனன தாத்தன தானா தானனதனன தாத்தன தானா தானனதனன தாத்தன தானா தானனதனதான
பாடல் வரிகள்
நிருத ரார்க்கொரு காலா ஜேஜெயசுரர்க ளேத்திடு வேலா ஜேஜெயநிமல னார்க்கொரு பாலா ஜேஜெயவிறலான
நெடிய வேற்படை யானே ஜேஜெயஎனஇ ராப்பகல் தானே நான்மிகநினது தாட்டொழு மாறே தானினியுடனேதான்
தரையி னாழ்த்திரை யேழே போலெழுபிறவி மாக்கட லுடே நானுறுசவலை தீர்த்துன தாளே சூடியுனடியார்வாழ்
சபையி னேற்றியின் ஞானா போதமுமருளி யாட்கொளு மாறே தானதுதமிய னேற்குமு னேநீ மேவுவதொருநாளே
தருவி னாட்டர சாள்வான் வேணுவினுருவ மாய்ப்பல நாளே தானுறுதவசி னாற்சிவ னீபோய் வானவர்சிறைதீரச்
சகல லோக்கிய மேதா னாளுறுமசுர பார்த்திப னோடே சேயவர்தமரை வேற்கொடு நீறா யேபடவிழமோதென்
றருள ஏற்றம ரோடே போயவருறையு மாக்கிரியோடே தானையுமழிய வீழ்த்தெதிர் சூரோ டேயமரடலாகி
அமரில் வீட்டியும் வானோர் தானுறுசிறையை மீட்டர னார்பால் மேவியஅதிப ராக்ரம வீரா வானவர்பெருமாளே.
