பாடல் 1157
சுருதி வெகுமுகபு ராண கோடிகள்
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- குந்தலவராளி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (7 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தகிட-1 1/2, தகதிமி-2தனன தனதனன தான தானனதனதனன தான தானனதனன தனதனன தான தானன தந்ததான
பாடல் வரிகள்
சுருதி வெகுமுகபு ராண கோடிகள்சரியை கிரியைமக யோக மோகிகள்துரித பரசமய பேத வாதிகள்என்றுமோடித்
தொடர வுணரஅரிதாய தூரியபொருளை யணுகியநு போக மானவைதொலைய இனியவொரு ஸ்வாமி யாகியநின்ப்ரகாசங்
கருதி யுருகியவி ரோதி யாயருள்பெருகு பரமசுக மாம கோததிகருணை யடியரொடு கூடியாடிமகிழ்ந்துநீபக்
கனக மணிவயிர நூபு ராரியகிரண சரண அபி ராம கோமளகமல யுகளமற வாது பாடநினைந்திடாதோ
மருது நெறுநெறென மோதி வேரோடுகருது மலகைமுலை கோதி வீதியில்மதுகை யொடுதறுக ணானை வீரிடவென்றுதாளால்
வலிய சகடிலறி மாய மாய்மடிபடிய நடைபழகி யாயர் பாடியில்வளரு முகில்மருக வேல்வி நோதசிகண்டிவீரா
விருதர் நிருதர்குல சேனை சாடியவிஜய கடதடக போல வாரணவிபுதை புளகதன பார பூஷணஅங்கிராத
விமலை நகிலருண வாகு பூதரவிபுத கடககிரிமேரு பூதரவிகட சமரசத கோடி வானவர்தம்பிரானே.
