பாடல் 1152
குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிரு
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்ததன தனத்ததன தனத்ததன தனத்ததனதனத்ததன தனத்ததனதனதான
பாடல் வரிகள்
குறிப்பரிய குழற்குமதி நுதற்புருவ விலுக்குமிருகுழைக்கும்வடு விழிக்குமெழுகுமிழாலுங்
கொடிப்பவள இதழ்க்குமிகு சுடர்த்தரள நகைக்குமமுதினுக்குமிக வுறத்தழுவுகுறியாலும்
அறப்பெரிய தனக்குமன நடைக்குமினி னிடைக்குமலரடிக்குமிள நகைக்குமுளமயராதே
அகத்தியனொ டுரைத்தபொரு ளளித்தருளி அரிப்பிரமர்அளப்பரிய பதக்கமலமருள்வாயே
கறுத்தடரு மரக்கரணி கருக்குலைய நெருக்கியொருகணத்திலவர் நிணத்தகுடல்கதிர்வேலாற்
கறுத்தருளி யலக்கணுறு சுரர்க்கவர்கள் பதிக்குரிமையளித்திடரை யறுத்தருளுமயில்வீரா
செறுத்துவரு கரித்திரள்கள் திடுக்கிடவல் மருப்பையரிசினத்தினொடு பறித்தமர்செய்பெருகானிற்
செலக்கருதி யறக்கொடிய சிலைக்குறவர் கொடித்தனதுசிமிழ்த்தனமு னுறத்தழுவுபெருமாளே.
