பாடல் 1151
கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடை
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தானன தானான தந்தனதனத்த தானன தானான தந்தனதனத்த தானன தானான தந்தனதந்ததான
பாடல் வரிகள்
கறுத்து நீவிடு கூர்வேலி னுங்கடைசிவத்து நீடிய வாய்மீன வொண்குழைகடக்க வோடிய ஆலால நஞ்சனவஞ்சநீடு
கயற்க ணார்கனி வாயூற லுண்டணிகழுத்து மாகமு மேகீப வங்கொடுகலக்க மார்பக பாடீர குங்குமகொங்கைமீதே
உ றுத்து மாரமு மோகாவ டங்களுமருத்து நேரிய கூர்வாள்ந கம்படஉ டுத்த ஆடையும் வேறாயு ழன்றுகழன்றுவீழ
உ ருக்கு நாபியின் மூழ்காம ருங்கிடைசெருக்கு மோகன வாராத ரங்களையொழிக்க வோர்வகை காணேனு றுந்துணையொன்றுகாணேன்
நிறத்த நூபுர பாதார விந்தமுமுடுத்த பீலியும் வாரார்த னங்களும்நிறத்தி லேபடு வேலான கண்களும்வண்டுபாட
நெறித்த வோதியு மாயான்ம னம்பரதவிக்க மால்தர லாமோ கலந்திடநினைக்க லாமென வேல்வேடர் கொம்புடனண்புகூர்வாய்
மறித்த வாரிதி கோகோவெ னும்படிவெறுத்த ராவணன் வாணாளை யம்பினில்வதைத்த மாமனு மேவார்பு ரங்கனல்மண்டமேரு
வளைத்த தாதையு மாறான குன்றமுமனைத்து லோகமும் வேதாக மங்களும்மதித்த சேவக வானாளு மும்பர்கள்தம்பிரானே.
