பாடல் 1144
எத்தி யிருகுழையை மோதி மீனமதின்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்த தனதனன தான தானதனதத்த தனதனன தான தானதனதத்த தனதனன தான தானதனதனதான
பாடல் வரிகள்
எத்தி யிருகுழையை மோதி மீனமதின்முட்டி யிடறியம தூதர் போல முகிலெட்டி வயவர்கர வாளை வேல்முனையையெதிர்சீறி
எத்தி சையினுமொரு காம ராஜன்மிகவெற்றி யரசுதனை யாள வீசியடலெற்றி யிளைஞருயிர் கோலு நீலவிழிமடமாதர்
வித்தை தனிலுருகி யாசை யாகியவர்கைக்குள் மருவுபொரு ளான ஆகும்வரைமெத்தை தனிலுருகி மோக மாகிவிடஅதன்மேலே
வெட்க மிலைநடவு மேகு மேகுமினிமற்ற வரையழையு மாத ரேயெனமுன்விட்ட படிறிகள்தம் நேச ஆசைகெடஅருள்வாயே
ஒத்த வரிகமுகு வாளை தாவுபுனல்அத்தி நகரமர சான வாள்நிருபன்ஒக்கு நினைவுமுனி லாமல் வாகுபெலநிலைகூற
உ ற்ற தருமனடல் வீமன் வேல்விசையன்வெற்றி நகுலசக தேவர் தேர்தனிலும்ஒத்து முடுகிவிடு பாகன் வாளமரிலசுரேசன்
பத்து முடிகள்துக ளாக வாகுஇருபத்து மொருகணையில் வீழ நேரவுணர்பட்டு மடியஅமர் மோது காளமுகில்மருகோனே
பச்சை மயிலில்வரு வீர வேல்முருகதுட்ட நிருதர்குல கால வானவர்கள்பத்தி யுடனடியில் வீழ வாழ்வுதவுபெருமாளே.
