பாடல் 1103
வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்தனா தனதனந் தந்தனா தனதனந்தந்தனா தனதனந்தனதான
பாடல் வரிகள்
வண்டுதான் மிகவிடங் கொண்டகா ரளகமென்பந்திமா மலர்சொரிந்துடைசோர
வம்புசேர் கனிபொருந் தின்பவா யமுதருந்தந்தமா மதனலம்விதமாக
விண்டுமே னிகள்துவண் டன்றில்போ லுளமிரண்டொன்றுமா யுறவழிந்தநுபோகம்
விஞ்சவே தருமிளங் கொங்கையார் வினைகடந்துன்றன்மே லுருகஎன்றருள்வாயே
பண்டுபா ரினையளந் துண்டமால் மருகசெம்பைம்பொன்மா நகரிலிந்திரன்வாழ்வு
பண்பெலா மிகுதிபொங் கின்பயா னையைமணந்தன்பினோ ரகமமர்ந்திடுவோனே
அண்டர்தா மதிபயங் கொண்டுவா டிடநெடுந்தண்டுவாள் கொடுநடந்திடுசூரன்
அங்கமா னதுபிளந் தெங்கும்வீ ரிடவெகுண்டங்கைவே லுறவிடும்பெருமாளே.
