உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 1101

தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்தனந் தந்தனந் தந்தனந் தந்தனந்தந்தனந் தந்தனந்தனதான

பாடல் வரிகள்

தந்தமுந் துன்பவெஞ் சிந்தைகொண் டந்தகன்தண்டவொன் றன்றொடுங்கிடுமாவி

தஞ்சமென் றும்பரிந் தின்சொல்வஞ் சந்தெரிந்தன்றுமென் றுந்தனந்தனைநாடி

நின்தனன் பென்பதொன் றின்றிநன் றென்றுநெஞ்சின்கணன் பொன்றில்மங்கையர்நேசம்

நின்றளந் துஞ்சளங் கொண்டிடும் புன்கணந்தின்பமொன் றின்றியிங்குழல்வேனோ

சுந்தரன் பந்தமுஞ் சிந்தவந் தன்புடன்தொண்டனென் றன்றுகொண்டிடுமாதி

தும்பைசெம் பொன்சொரிந் துந்தருங் கொன்றைதுன்பங்கடிந் தென்பொடுந்தொலையாநீர்

அந்தமுந் திந்துவுங் கெந்தமிஞ் சுங்கொழுந்தன்றுமின் றும்புனைந்திடும்வேணி

அன்பர்நெஞ் சின்புறுஞ் செஞ்சொலன் கந்தனென்றண்டரண் டந்தொழும்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →