பாடல் 110
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதனன தான தந்த தனதனன தான தந்ததனதனன தான தந்ததனதான
பாடல் வரிகள்
அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்துஅழகுபெற வேந டந்துஇளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்றுஅதிவிதம தாய்வ ளர்ந்துபதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்திருவடிக ளேநி னைந்துதுதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்றுதிரியுமடி யேனை யுன்றனடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பைமணிமுடியின் மீத ணிந்தமகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்தமலைமகள்கு மார துங்கவடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்துபடியதிர வேந டந்தகழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்துபழநிமலை மேல மர்ந்தபெருமாளே.
