பாடல் 1098
நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்
- தலம்
- பொதுப்பாடல்கள்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தானதத்த தனதனன தானதத்ததனதனன தானதத்ததனதான
பாடல் வரிகள்
நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள்நயனமத னால்மருட்டிவருவாரை
நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்றுலளிதமுட னேபசப்பியுறவாடி
வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்திமதனனுடை யாகமத்தினடைவாக
மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும்வனிதையர்க ளாசைபற்றியுழல்வேனோ
இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்கஇருகையுற வேபிடித்துஉ ரலோடே
இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ணனியல்மருக னேகுறத்திமணவாளா
அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டுஅரியதமிழ் வாதுவெற்றிகொளும்வேலா
அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்டஅமரர்சிறை மீளவிட்டபெருமாளே.
