பாடல் 1097
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து
- தலம்
- பொதுப்பாடல்கள்
- ராகம்
- கரஹரப்ரியா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகிட-1 1/2தனதனன தானதத்த தனதனன தானதத்ததனதனன தானதத்ததனதான
பாடல் வரிகள்
எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்துஇடர்முளைக ளேமுளைத்துவளர்மாயை
எனுமுலவை யேயணைத்து விரககுழை யேகுழைத்துஇருளிலைக ளேதழைத்துமிகநீளும்
இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்துஇடியுமுடல் மாமரத்தினருநீழல்
இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்குஇனியதொரு போதகத்தையருள்வாயே
வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்றமதியிரவி தேவர்வஜ்ரபடையாளி
மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ரமறையஎதிர் வீரவுக்ரர்புதல்வோனே
அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டுஅசலமிசை வாகையிட்டுவரும்வேலா
அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டிஅமரர்சிறை மீளவிட்டபெருமாளே.
